நீரழிவு நோயினால் பல கோடி மக்கள் உலகமெங்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரழிவு நோயை மருத்துவத்தினால் மட்டும் அல்ல உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தினால் கட்டுக்குள் கொண்டு வரலாம். நீரழிவு நோய்யை கட்டுப்படுத்தாமல் இருந்தால், அதன் தாக்கம் உடலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். பலருக்கும் ஆரம்ப நிலை அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம், ஆனால் ஆரம்பத்திலேயே கவனித்துக் கொண்டால் பெரிய சிக்கல்களை தவிர்க்கலாம். இந்த பதிவில் , நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகள் மற்றும் அதைப் பற்றிய விரிவான தகவல்களை பார்ப்போம்.
நீரிழிவு நோய் என்றால் என்ன?
நீரிழிவு (Diabetes) என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை குறிக்கிறது. உடலில் உள்ள இன்சுலின் (Insulin) என்னும் ஹார்மோன் (Harmone) சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால், இன்சுலின் சுரப்பு குறையும்போது அல்லது உடல் அதை சரியாக பயன்படுத்த முடியாமல் இருந்தால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதுவே நீரிழிவு நோயாக மாறுகிறது.
நீரிழிவு நோயானது Type 1 மற்றும் Type 2 என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. Type 1 Diabetes பொதுவாக குழந்தைகள் மற்றும் இளையோரில் காணப்படும் இனம், இதற்கு மருந்துகள் அல்லது இன்சுலின் ஊசி (Insulin injection) தேவைப்படும். Type 2 Diabetes அதிகம் காணப்படும் ஒரு நிலை, இது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் கட்டுப்படுத்தக்கூடியது.
நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகள்
பலருக்கும் ஆரம்ப நிலை நீரிழிவு அறிகுறிகள் பெரிதாக தெரியாமல் போகலாம். ஆனால், உடல்நலத்தில் ஏதேனும் மாறுபாடு உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
சில முக்கியமான அறிகுறிகளைப் பார்ப்போம்:
1. தொடர்ந்து கடும் தாகம்
நீரிழிவு ஏற்பட்டால், உடல் அதிகளவில் சிறுநீரை வெளியேற்றும். இதன் காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் . இதில் உடல் நீர்ச்சத்து இழப்பதால், தொடர்ந்து தாகமாக உணரலாம்.
2. அதிகமான பசி உணர்வு
உடல் சர்க்கரை அளவை சரியாக உபயோகிக்க முடியாத நிலையில் , செல்களுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதில்லை. இதனால், அதிக பசியும் நீரிழிவு நோயின் ஒரு அறிகுறி.
3. உடல் எடை திடீரென குறைவது
உணவு அதிகமாக எடுத்தாலும் குறைய கூடும் இது முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.
4. அதிகமான சோர்வு மற்றும் களைப்பு
உடலில் சரியான சக்தி கிடைக்காததால், எளிதில் சோர்வு ஏற்படும். எந்த வேலையும் செய்ய முடியாமல் போனாலும், அதிக தூக்கம் இருந்தாலும், இது நீரிழிவு அறிகுறியாக இருக்கலாம்.
5. காயங்கள் மெல்ல போக்கு
நீரிழிவு உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவாக ஆறாது. உடலில் உள்ள அதிக சர்க்கரை அளவு தொற்றுக்களை (infection) அதிகரிக்கச் செய்யும். உடலில் முக்கியமாக, கால் பகுதிகளில் இந்த காயங்கள் அதிக படியாக காணலாம்.
6. பார்வை மங்கல்
நீரிழிவு உள்ளவர்கள் கண் பார்வையில் மங்கலாக உணரலாம். ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவு கண் நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது.
7. கை, கால் புண் மற்றும் உணர்வு இழப்பு
நீரிழிவு நோய் நரம்புகளை பாதிக்கக்கூடும். இதனால் கால்களில் துடிப்பு உணர்வு குறையலாம், அல்சர் (புண்கள்) உருவாகலாம். அத்துடன் கால் வீக்கம், பாத எரிச்சல் மறத்து போகும் தன்மை ஒரு அறிகுறி ஆகும்.
8. சரும வறட்சி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள்
நீரிழிவு காரணமாக தோலில் அதிக வறட்சி ஏற்படலாம். குறிப்பாக கழுத்து, மூக்கு, செவிகள் போன்ற இடங்களில் கருமை தோன்றலாம்.
9. அடிக்கடி தொற்று நோய்கள் ஏற்படுதல்
நீரிழிவு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடும். இதனால், அடிக்கடி சருமத்தில் தொற்றுகள் (skin infections), சிறுநீரக பாதிப்பு (UTI/ vaginal infection) போன்றவை ஏற்படும்.
10. குறைந்த பாலியல் ஆர்வம்
நரம்புகளின் பாதிப்பு மற்றும் இரத்த ஓட்ட குறைவு காரணமாக, பாலியல் ஆர்வம் குறையலாம்.
நீரிழிவை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை முற்றிலும் சரி செய்ய முடியாது. ஆனால், சரியான சிகிச்சை, உணவு பழக்கவழக்க மாற்றம் மற்றும் உடல் பயிற்சியின் மூலம் அதை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
சொல்லப்பட்ட உணவுப் பழக்கங்கள்:
✅ கோதுமை, கம்பு, ராகி போன்ற முழுமையாக இருக்கும் தானியங்கள் உபயோகிக்கலாம்
✅ கீரைகள், கோஸ், வெண்டைக்காய் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் உட்கொள்ளலாம்
✅ முட்டை, மீன், பருப்பு போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள் சேர்த்துக்கொள்ளலாம்
✅ நெல்லிக்காய், மாதுளை, கொய்யா போன்ற குறைந்த இனிப்பு உள்ள பழங்கள் உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்
❌ அதிக வெண்ணெய், கிரீம், பழம் சார்ந்த இனிப்பு உணவுகள் தவிர்க்கவும்
❌ அதிகமுள்ள கார்போஹைட்ரேட்(Carbohydrate) உணவுகள் (சாதம், மைதா) போன்றவை தவிர்ப்பது நல்லது
உடல் பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றம்:
✅ தினமும் 30-45 நிமிடங்கள் நடைப்பயிற்சி
✅ சரியான தூக்க வழக்கம் (6-8 மணி நேரம்)
✅ மன அழுத்தத்தை குறைக்கும் தியானம் மற்றும் யோகா
✅ சிகரெட் மற்றும் மதுபானத்தை தவிர்ப்பது
மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவரை அணுகுவது எப்படி?
நீரிழவு நோய்யை கட்டுப்படுத்த சிறந்த மருந்துகளும், இன்சுலின் சிகிச்சையும் கிடைக்கிறது. ஆனால், சரியான சிகிச்சை தேவைப்பட்டால், மருத்துவர் ஆலோசனை அவசியம்.
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மருத்துவரை தேடும்பொழுது Dr Durai சிறந்த மருத்துவராக உள்ளார். 10 வருட அனுபவம் மற்றும் மக்களால் கைராசி மருத்துவர் என்றும் பெயர் பெற்றுள்ளார். Dr Durai சிறப்பு கல்வி தகுதிகளுடன் நீரிழிவு நோய் மற்றும் பாத பராமரிப்பிற்கான சிறந்த மருத்துவராக திகழ்கிறார்.
நீரிழவு நோய் குறித்த சிறந்த ஆலோசனை, உணவுப் பட்டியல், மற்றும் சரியான சிகிச்சை தேவையா? Dr. Durai’s Diabetes & Foot Care Clinic இதற்காகவே இருக்கிறது! நீரிழிவு நோயாளிகள் அதிகம் சந்திக்கும் காலில் ஏற்படும் புண்கள், பாதத்தில் வறட்சி, நரம்பு பாதிப்பு போன்ற சிக்கல்கள் அனைத்திற்கும் சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது.
நீரிழிவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் இப்போது Dr. Durai’s Clinic-ல் ஆலோசனை பதிவு செய்யுங்கள்! நீரிழவு நோய் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்த விடாதீர்கள் – நீங்களே அதை கட்டுப்படுத்துங்கள்!