“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்பார்கள். உணவுப் பொருள் என்று வரும் போது, உப்பிற்கு இருக்கும் அதே மரியாதை இனிப்பிற்கும் உண்டு. இனிப்பாக ஏதும் சாப்பிடவில்லை என்றால், வாழ்க்கையே இனிமை இழந்துவிடுவதாக சிலர் கருதுவதும் உண்டு. அறுசுவைகளின் ராணி என்றால் அது இனிப்புச்சுவை தான். இனிப்பு பிரியர்களின் அழையா விருந்தாளி என்று,நீரிழிவு அதாவது சர்க்கரை நோயை சொல்லலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 8.3% இந்தியர்கள் பாதிப்படைந்துள்ளனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்படடவர்களின் உணவு பழக்கம் சற்று வித்தியாசமாக இருக்கும்.
அவர்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று, இனிப்பு சேர்க்கை. இனிப்பில், வெள்ளை சர்க்கரை(refined sugar) , வெல்லம், தேன் இவற்றில் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது எது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
செல்களுக்கு ஆற்றல், குளுக்கோஸ் – இல் இருந்து கிடைக்கிறது. உடலுக்கு தேவையான குளுக்கோசின் வேலை தடைபடுவது தான் நீரிழிவு நோயாய் மாறுகிறது. நீரிழிவு நோயில் , டைப்1 , டைப்2 என இரண்டு வகை உண்டு.
டைப் 1: இந்த வகை, சிறு வயதில் ஏற்படும், இந்த வகையில் உடலால் இன்சுலினை தயாரிக்க முடியாது.
டைப் 2 : இந்த வகை பெரும்பாலும் 40 வயதுக்கு மேலானோற்கு ஏற்றப்படுவது. இந்த வகையில் உடல் இன்சுலினுக்கு சரியாக பதிலளிக்காது.
சர்க்கரை:
ரீபைண்டு சுகர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை, பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒன்று. கரும்பு, சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றில் இருந்து, தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பின் போது ரசாயன முறையில் செய்யப்படுவதால் , செய்முறையின் போது, இயற்கை சத்துக்கள் அகற்றப்பட்டு, முழுவதுமாக சுத்திகரிக்கபடுகிறது. எனவே இதில் எந்த ஊட்டச்சத்தும் இருக்காது.
வெல்லம்:
வெள்ளை சர்க்கரையை ஒப்பிடுகையில், வெல்லம் செய்முறையில், காப்பர், மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, ஜின்க், பொட்டாசியம் போன்ற இயற்கை சத்துக்கள் தக்க வைக்க படுகின்றன. எனவே ரீபைண்டு சுகரை விடவும் வெல்லம் ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கும்.
தேன்:
தேன் ஒருவகை இயற்கை இனிப்பூட்டி, ஆனால் மார்க்கெட்டில் கிடைக்கும் தேன் அசலா என்பது சந்தேகமே. வெல்லத்தை போலவே, இரும்புச்சத்து உள்பட வைட்டமின்கள், மினரல்கள், வைட்டமின் சி, போலேட், மெக்னிசிசியம், பொட்டாசியம், கால்சியம், போன்ற சத்துக்கள் காக்கப்படுகிறது.
மூன்றில் எது சிறந்தது?
சர்க்கரை, வெல்லம், தேன் மூன்று இனிப்புக்கூட்டிகளுக்கும் இருக்கும் வித்தியாசம் அவற்றின் செய்முறை. செய்முறையின் போது ஏற்படும் மாற்றங்களே இவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை நிர்ணயிக்கிறது. இதனுடன் குளுக்கோஸ் இன்டெக்ஸ்-யும்(Glycemic Index – GI) நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குளுக்கோஸ் இன்டெக்ஸ் என்பது உணவு , ரத்த சர்க்கரை அளவை (blood sugar level )எவ்வாறு அதிகப்படுத்துகிறது என்பதற்கான அளவீடாகும்.
சர்க்கரையின் GI அளவு 63 முதல் 65 இருக்கலாம், வெல்லத்தின் GI அளவு 84, தேனின் GI அளவு ஏறக்குறைய 58 ஆக இருக்கலாம். ரீபைண்டு சுகர், வெல்லத்தை ஒப்பிடுகையில், தேன் சரியான மாற்றாக இருக்கும் என்பதால் ரத்த சர்க்கரை அளவில் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும்.
இருப்பதிலேயே, வெல்லத்தின் GI அளவு அதிகம். ரீபைண்டு சுகர் , தேன், வெல்லம் மூன்றில் எது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது என்று பார்த்தால், வெள்ளை சர்க்கரை கெமிக்கல் கலந்த இனிப்பு மட்டுமே. வெல்லம் கெமிக்கல் இல்லாத, இயற்கை சத்துக்கள் குறையாத இனிப்பூட்டி எனினும், GI அதிகம்.
இவற்றில் தேன் ஒரு சிறந்த மாற்றாக இருக்கலாம், ஆனால் அது மார்க்கெட்டில் இருந்து வாங்காமல் இருக்கும் வரை மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளவும். வெள்ளை சர்க்கரை, வெல்லம், தேன் எதுவாக இருந்தாலும் அவற்றை அளவுடன் எடுத்து வருவதே சிறந்தது.
இனிப்பாசை (sweet cravings) கட்டுப்படுத்த சில வழிகள் :
* இனிப்பு எடுத்து கொள்வதை சட்டென்று நிறுத்திவிடுவது கடினம். அப்படி செய்தால் அது ஸ்வீட் கிரேவிங்ஸை இன்னும் தூண்டி விடுமே தவிர, நிறுத்த உதவாது. எனவே படி படியாக நிறுத்த முயலலாம்.
* ஒரு நாளைக்கு குடிக்கும் டீ, காப்பியில் சேர்க்கும் இனிப்பின் அளவை குறைப்பது அல்லது நீக்குவது நல்லது .
* ஒரு நாள் தானே ஒன்னும் ஆகாது என்று நினைத்து சாப்பிட்டால், கட்டுப்பாடு இன்றி சாப்பிடக்கூடும். எனவே கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.
* இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், பழங்களை சாப்பிடலாம். பழங்களில் நேச்சுரல் சுகர் இருப்பதால் உடலுக்கு பெரிய தீங்கு ஏற்படாது.
* ஒரு நாளைக்கு 9 டீஸ்ப்பூனுக்கு மிகாமல் இனிப்பு எடுத்து கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோய், அதனால் ஏற்படும் பாத சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி அலைபவரா நீங்கள்? உங்கள் பிரச்சனைகளுக்கு நீரிழிவு மற்றும் பாத பிரிவில் சிறந்து விளங்கும் Dr துரை (புதுக்கோட்டை) அவர்களால் தீர்வு சொல்ல முடியும்.
Dr துரையின் சிகிச்சை முறை, பயனடைந்தவர்களின் கருத்து மற்றும் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://drduraisdiabeticcare.com/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.