உலகளவில் தற்போது 83 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர், அதில் 10 சதவீதமானவர்கள் இந்தியாவில் உள்ளனர். இதனால், இந்தியா “The Diabetes Capital” of the world என அழைக்கப்படுகிறது.
நீரிழிவு நோய், சர்க்கரை நோய் என்று பொதுவாக அறியப்படுகிறது. நீரிழிவு நோய் என்பது உடலில் இன்சுலின் என்ற ஹார்மோன் (insulin harmone) சரியாக சுரக்காமல் இருப்பதால், அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதனால் ஏற்படுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
மருத்துவசிகிச்சை அவசியமானாலும் இதை கட்டுப்படுத்த சில சரியான உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் வீட்டுல் இருந்த படியே கட்டுப்படுத்தலாம் என்று டாக்டர் துரை கூறுகிறார். அதை பற்றிய தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
இரு வகை நீரிழிவு நோய்கள்:
நீரிழிவு நோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன, ஆனால் அவற்றின் வேறுபாடுகள் பற்றி எல்லோருக்கும் தெளிவாக தெரியாது. இன்சுலின் சரியாக செயல்படாததாலும் அல்லது உடலில் இன்சுலின் உற்பத்தி முற்றிலும் இல்லாததாலும், டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்களில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்த இரு நிலைகளிலும் பிரச்சினை ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவற்றின் காரணங்களிலும் சிகிச்சை முறைகளிலும் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
உணவு முறைகள் மற்றும் பராமரிப்பு
Food Therapy என்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. உங்கள் உணவில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கான உணவு பொருட்கள் மற்றும் சீரான உணவு முறைகளை மாற்றிக்கொண்டால், நீரிழிவு நோயின் பாதிப்புகளை குறைக்கலாம்.
உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள்:
- மசாலா பொருட்கள்: மஞ்சள், சீரகம், இஞ்சி, பூண்டு, இலவங்கப்பட்டை (cinnamon) போன்ற மசாலா பொருட்கள் உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை சரிசெய்ய உதவுகின்றன. இவை அனைத்தும் நீரிழிவு நோயின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும்.
- பச்சை காய்கள்: பச்சை பூக்கோசு (broccoli), பீன்ஸ், முட்டைக்கோசு, பாகற்காய், முருங்கைக்காய், கீரை வகைகள் போன்ற பச்சை காய்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், இவை நெஞ்சினில் உள்ள கசடை அகற்றி, எளிதாக செரிமானத்தை உருவாக்குகின்றன.
- பழங்கள்: பல வகையான பழங்கள், குறிப்பாக பெர்ரி குடும்பம் (berry family) எனப்படும் ஸ்ட்ராபெரி, முள்பெரி, புளூபெரி பழங்கள் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றில் உள்ள சத்துகள் சர்க்கரை நோய் சீர் செய்ய உதவுகிறது. இவை உடலின் ஆன்டி ஆக்சிடன்ட் (anti-oxidnt) செயல்பாட்டை மேம்படுத்தவும், சர்க்கரை நிலையை ஒழுங்குபடுத்தவும் உதவுகின்றன.
- முந்திரிகள் மற்றும் விதைகள்: பாதாம், பம்ப்கின் விதைகள், பிஸ்தா, முந்திரி, சியா விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன. இவற்றை சிறிய அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுவது நல்லதாகும்.
- கற்றாழை (Alovera): கற்றாழை (alovera) உணவுகளில் சேர்ப்பது, வெறும் வயிற்றில் அல்லது ஜூஸ் (juice) போல் சேர்த்துக்கொள்ளும் பொழுது உடலில் ஊட்டச்சத்துக்ள் அதிகரிக்கும். இது சிறந்த ஜீரண முறைகளை மேம்படுத்தி, சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.
சமையல் முறைகள்:
சமையலின் முறையில், உணவு செய்யும் முறைகள் முக்கியமானது. உணவை வேகவைத்து சேர்த்துக்கொள்வது, பேக்கிங் (baking), கிரில்லிங் (grilling) போன்ற முறைகளில் உணவுகளைச் செய்வது, உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல், உடலை ஆரோக்கியமாக வைக்கும். எண்ணெய் அதிகமாக பயன்படுத்த வேண்டாம். வறுவலை தவிர்த்து பொரியலாக உட்கொள்வது உடலுக்கு நல்லதாகும்
உடற்பயிற்சி:
நீரிழிவு நோயாளிகளுக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள இன்சுலின் ஹார்மோன் (insulin harmone) சரியாக செயல்பட உதவுகிறது. தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யுங்கள். அதோடு, நீச்சல், ஷட்டில் அல்லது யோகா போன்ற உங்கள் விருப்பமான உடற்பயிற்சிகளைச் கூட செய்யலாம். உடல் சுறுசுறுப்பாக இருந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும்.
மன அழுத்தம் (Stress Management):
மனஅழுத்தம் நீரிழிவு நோயின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மனஅழுத்தம் அதிகமாக இருந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும். மனஅழுத்தத்தை குறைக்க தினசரி யோகா, மூச்சுப்பயிற்சி அல்லது தியானம் செய்யலாம். திடீரென மனஅழுத்தம் அல்லது மனநிலை மாற்றங்கள் ஏற்பட்டால், புத்தகங்கள் படிக்க, சினிமா பார்க்க அல்லது இசை கேட்கவும். இது உங்கள் மனதை சீராக வைத்துக்கொள்ள உதவும்.
பாதபராமரிப்பு:
நீரிழிவு நோயாளிகளுக்கு பாத பராமரிப்பு மிகவும் அவசியம். நீரிழிவு நோயால் பாதங்களில் காயங்கள், புண்கள், ஆணி வளர்ச்சி, பாத எரிச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை கவனிக்காமல் விட்டால் பெரிய சிக்கல்களாக மாறும். தினசரி கால்களை சுத்தமாக வைத்துக்கொண்டு, பாதங்களை பராமரிக்க வேண்டும். சிறிய காயங்கள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும், பாதங்களுக்கு ஏற்ற தனிப்பயன் காலணிகளை பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.
போதுமான தூக்கம் மற்றும் தண்ணீர் குடிக்கவும்:
தூக்கம் உடலின் செயல்பாட்டில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தினசரி 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது உடலின் சீரான செயல்பாட்டிற்கும், மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. அதேபோல், சர்க்கரை அல்லது நீரழிவு நோய்யாளிகள் தினசரி 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலின் நீர்ச்சத்தை சீராக வைத்திருக்க உதவும்.
தவிர்த்திருங்கள்:
நீரிழிவு நோயாளிகள் சில பழக்கங்களை தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை உள்ள உணவுகள், ஜங்க் உணவுகள் (Junk Foods), புகைத்தல், மற்றும் மது அருந்துதல், உடல் எடையை கட்டுப்படுத்தாமல் இருப்பது போன்றவை நீரிழிவு நோயை மேலும் மோசமாக்கும். முக்கியமாக, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை தவிர்க்கக்கூடாது.
முடிவுரை:
இந்த வழிமுறைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும். ஆனால், நீரிழிவு நோய் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. ஒரே மாதிரியான வீட்டுமுறை சிகிச்சை அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தாது. இதனால், முழுமையான சிகிச்சைக்கு மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
டாக்டர் துரை 10 வருட அனுபவத்துடன் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்துவருகிறார். அவருடைய தனித்துவமான சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள், கால் மற்றும் பாத பராமரிப்பு அடங்கும். உங்கள் உடல்நிலை, நோயின் நிலை மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப சிறப்பான சிகிச்சை திட்டத்தை ஆலோசனையாக தருகிறார் . நீரிழிவு நோயின் சிக்கல்களை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு டாக்டர் துரையை அணுகுங்கள். உங்கள் உடல்நலத்தை பாதுகாக்க இன்றே நேர்முக ஆலோசனைக்குபதிவு செய்யுங்கள்!