நமது உடலில் கால்கள் என்பது மிகவும் முக்கியமான உறுப்பாக திகழ்கின்றன. அவற்றை பாதுகாப்பது நமது பொறுப்பாகும். கால்களில் வரும் பாதிப்புகளில் கால் ஆணியும் ஒன்று. உலகில் 14-48% மக்கள் கால் ஆணியால் அவதிப்படுகின்றனர் என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. கால் ஆணி என்பது பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், அதன் தாக்கம் மிக அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது . இது ஒருவரின் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் ஒன்றாகும். கால் ஆணி என்பது கால்களில் அதிக அழுத்தம் மற்றும் பாத அடியில் ஏற்படும் உராய்வால் உருவாகும் நிலையாகும். இதற்கு சரியான பராமரிப்பு மற்றும் நேரடி நீரிழிவு நோய் மற்றும் கால் நிபுணர் ஆலோசனை அவசியமாகும். இதுவே தீர்விற்கான சரியான முதல் படியாகும். இவற்றைப் பற்றி மேலும் விரிவாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
கால் ஆணி என்றால் என்ன?
கால் ஆணி என்பது குதி கால் எனப்படும் கால்களின் அடிப்பகுதியில் அல்லது விரல்களின் சுற்றுப்பகுதியில் ஏற்படும் ஒரு நிலையாகும். கால்களில் குறிப்பிட்ட இடங்களில் தோல் அதிகமாக அல்லது கடினமாக வளர்வதால் ஏற்படும் ஒரு நிலையாகும். இவை சிறிய அளவில் இருந்தாலும், பெரிதாகவும் வரக்கூடும். மூன்று வகைகளில் கால் ஆணி பிரிக்கப்படுகிறது, மேலும் இதற்கான பல காரணங்கள் உள்ளன. கால் ஆணியின் அறிகுறிகள், நீரிழிவு பாத பராமரிப்பு தடுப்பு முறைகளை விரிவாகப் படிக்கலாம்.
கால் ஆணியின் வகைகள்
கடினமான கால் ஆணி
இவைகள் இறந்த தோல்கள் மேலும் மேலும் சேர்வதால் கடினமாகி கால்களின் மேல் தோன்றும். பொதுவாக இவை கால் விரல்களில் ஏற்படுகின்றன. அதிக அழுத்தம் ஏற்படும் இடங்களில் இவை பொதுவாக உருவாகும்.
மென்மையான கால் ஆணி
இவை மென்மையான தன்மையைக் கொண்டிருக்கும். தொடும்போது மென்மையாக ரப்பர் போன்ற உணர்வைத் தரும். சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும் இவை, பெரும்பாலும் கால் விரல்களின் இடையே உருவாகின்றன.
விதை கால் ஆணி
இவ்வகையான கால் ஆணிகள் கால்களின் அடிப்பகுதியில் தோன்றும் சிறிய வடிவிலான கால் ஆணிகள் ஆகும். இதன் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும். இவ்வகை கால் ஆணிகளில் அனைவர்க்கும் பொதுவாக தோன்றும் தன்மை உடையவை.
கால் ஆணி உருவாக முக்கிய காரணங்கள்
தவறான காலணிகள்: மிகவும் இறுக்கமான அல்லது போதுமான அளவிற்கு அகலமாக இல்லாத காலணிகள் போன்ற காரணங்களால் பாத எரிச்சல் மற்றும் கால் ஆணி ஏற்படலாம்.
தோலில் அழுத்தம்: நடக்கும் பொழுது ஏற்படும் அழுத்தம் மற்றும் தொடர்ந்து நீண்ட நேரம் நின்று வேலை செய்யும் பொழுது ஏற்படும் அழுத்தத்தால் கால் ஆணி தொடரலாம்.
காயம் அல்லது கீறல்: கால் விரல்களில் ஏற்படும் காயம் அல்லது கீறல்கள், சில தருணங்களில் கால் விரல்களின் நகங்களை தவறாக வெட்டுவதால் கூட வரலாம்.
மரபியல் குறைபாடு: மரபியல் முறையால் சில பெற்றோர்க்கு கால் ஆணியின் பிரச்சினை இருந்தால், பரம்பரை வழியும் அதிகமாக ஏற்படலாம்.
காலணி அணியாமல் இருப்பது: காலணி அணியாமல் இருப்பது மற்றும் வெறும் கால்களில் நடப்பதினாலும் கால்களில் உராய்வு அதிகமாக இருப்பதாலும் இது ஏற்படலாம்.
முற்கள் மற்றும் கற்கள் குத்தினால்: கால்களில் குறிப்பிட்ட இடத்தில் முள் மற்றும் சிறிய கற்கள் குத்தி அதை பராமரிக்காமல் இருந்தாலும் இவை ஏற்படலாம்.
கால்களின் வடிவம்: கால்களின் வடிவம் சரியாக இல்லாவிட்டால் மற்றும் நடக்கும் தோரணை தவறாக இருந்தால் கால் ஆணி வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
கால் ஆணியின் அறிகுறிகள்
- தோல் கடினமாகுதல்
- சிவப்பு நிற மாற்றம்
- நடக்கும் போது பாதத்தில் கூர்மையான வலி
- காயங்கள் அல்லது சீழ் தோற்றம்
- தோலில் தடிப்பு ஏற்படுதல்
கால் ஆணியைத் தடுப்பதற்கான வழிகள்
சுத்தமான கால்கள்: தினமும் கால்களை சுத்தமாக பராமரிப்பது முக்கியமான முதல் நடவடிக்கையாகும்.
சரியான காலணிகள்: மென்மையான, பொருத்தமான மற்றும் அழுத்தம் இல்லாத அகலமான காலணிகளை தேர்வு செய்து அணிய வேண்டும்.
கால் மற்றும் பாத பராமரிப்பு : கால்கள் பராமரிப்பு மிகவும் அவசியம் எனவே கால்களை வறட்சியாக விடாமல் தகுந்த ஈரப்பதத்துடன் வைத்திருப்பது, மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது வெடிப்பு மற்றும் கீறல்களை தடுக்கும்.
நகம் வெட்டுவது: நகங்களை சீராக மற்றும் நேராக வெட்டுவது மிகவும் அவசியமாகும். இதன் மூலமாகவும் கால் ஆணிகளை தவிர்க்கலாம்.
சரியான காலுறை: தீவிரமான உடற் பயிற்சி அல்லது நீண்ட நேரம் வேலை செய்யும் பொழுது கால்களில் தகுந்த காலுறைகளை பயன்படுத்துவது அறிவுத்தப்படுகிறது.
கால் அணி பட்டைகள் பயன்படுத்துவது: கால் அணி பட்டைகள் பயன்படுத்துவதால் நடக்கும் பொழுது அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்கலாம் மேலும் அந்த குறிப்பிட்ட இடத்தில் காயம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
எப்பொழுது டாக்டரை அணுகவேண்டும்?
கால் ஆணிகளால் தொடர்ந்து தொந்தரவு ஏற்படும் பொழுது அல்லது காலில் மற்றும் பாதங்களில் புண்கள், வீக்கம், தடிப்பு தன்மை, சீழ் உருவாக்கம், கடினமான தோல் அதிகமாக இருக்கும் பொழுது நீரழிவு மற்றும் கால் நிபுணரை சந்திப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
மருத்துவரை அணுகும்போது அவரின் அனுபவம் மற்றும் அவர் நீரிழிவு மற்றும் பாத பராமரிப்பிற்கான சிறப்பு மருத்துவரா, முன் அனுபவம் உள்ளதா மேலும் அவர் அதில் கைத்தேர்ந்தவரா என்று தெரிந்துகொள்வது அவசியமாகும்.
டாக்டர் துரையின் பார்வையில் கால் ஆணி
நீரிழிவு நோய் மற்றும் பாத சம்மந்தமான பிரச்சினைகளை தீர்க்க டாக்டர். துரை ஒரு சிறந்த நிபுணர் ஆவார். அவரின் அனுபவம் மற்றும் நுட்பமான சிகிச்சை முறைகள் பலரின் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளது.
டாக்டர் துரையின் சிறப்பம்சம்:
- 10+ ஆண்டுகள் அனுபவம்: டாக்டர். துரை 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரிவில் கைத்தேர்ந்தவராக செயல்பட்டு வருகிறார்.
- 40,000+ கால் நோயாளிகளுக்கு தீர்வு: இதுவரை 40,000+நோயாளிகளுக்கு நீரிழிவு நோயினால் ஏற்படும் பாத பிரச்சினைகளுக்கு சிறந்த சிகிச்சை மற்றும் தீர்வினை வழங்கியுள்ளார்.
- 10,000+ கால்கள் துண்டிக்காமல் காப்பாற்றப்பட்டுள்ளன: நீரிழிவு நோயாளிகளுக்கு காலில் ஏற்பட்ட காயங்களால் மற்றும் ஆறாத கால் புண்களால் அவர்கள் கால்களை அகற்றும் நிலை ஏற்படலாம். அவர்கள் கால்களைஅகற்றாமல், மருத்துவம் மற்றும் தனிப்பயன் சிகிச்சை முறைகளால் குணப்படுத்துகிறார்.
டாக்டர் துரையின் சிகிச்சை முறைகள்
- காலணிகள்: நோயாளியின் காலின் நிலையை புரிந்து, 30 நிமிடங்களில் தனிப்பயன் காலணிகளை உருவாக்குகிறார்.
- மென்மையான சிகிச்சை: மிகக் குறைந்த மருந்துகள் மற்றும் சரியான ஆலோசனைகளுடன் பிரச்சினையை தீர்க்கிறார்.
- நோயாளி கல்வி: கால் ஆணியை தடுக்க மற்றும் பராமரிக்க, தகுந்த ஆலோசனைகளை வழங்குகிறார்.
கால்நலனுக்கான சிறந்த தீர்வு – டாக்டர் துரை
நீரிழிவு நோய் மற்றும் பாத பிரச்சினைகளுக்கு டாக்டர் துரையை அணுகுவது ஒரு சிறந்த தீர்வாகும். அவரின் நுட்பமான சிகிச்சை முறைகள் மற்றும் தனிப்பட்ட கவனம் நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், நிம்மதியையும் அளிக்கின்றன.
உங்கள் கால் பாதுகாப்பிற்காக இன்று ஒரு நேர்முக ஆலோசனையை பதிவு செய்யுங்கள்!